உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு – நால்வர் கைது

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கற்பிட்டி இப்பன்தீவு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, 63.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 14.5 கிலோகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

இதனிடையே, போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் கடந்த காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 35,000 இக்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளின் எண்ணிகையில் உயர்வு

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்