உள்நாடு

கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கானுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.

இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகிறார்.

அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

Related posts

ரணில் மக்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார் – தலதா அத்துகோரள

editor

சுவிஸ தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 24 மணித்தியாலயத்தில் – 525 : 03 [COVID UPDATE]