உள்நாடு

கரையோர புகையிரத சேவை பாதிப்பு

(UTV | கொழும்பு) –  கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இரு புகையிரத நிலையங்களுக்கிடையிலான கொம்பனித்தெரு நிலையத்திற்கு அருகில் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று சேவையில் ஈடுபடவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

வானிலை மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு

editor