அம்பாறை மாவட்ட கரும்பு பயிற்செய்கை உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை 4 மணியளவில் இறக்காமத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடையங்கள்:
2025 கரும்பு உற்பத்தியில் வீழ்ச்சி.
16.11.2025 அன்றிலிருந்து ஹிங்குராணை சீனி தொழிற்சாலை அடுத்த நான்கு மாதம் வரை மூடப்பட்டதன் காரணமாக கரும்பு உற்பத்தியாளர்கள் அறுவடை செய்ய முடியாமல் திண்டாட்டம்.
2025 அறுவடை செய்த கரும்புகளுக்கான உரம் மற்றும் பசலை கம்பெனியால் வழங்கப்படாமையினால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு.
வட்டியில்லா கடன் திட்டம் ஒன்றினை வழங்குமாறு கோரிக்கை.
குறித்த ஊடகவியலளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட கரும்பு பயிற்செய்கை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.ரஹீம் செயலாளர் ஏ.எஸ்.ஹாரூன் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் குமணநாயக்க விஜயலால் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கலென பலரும் கலந்து கொண்டனர்.
-இறக்காமம் ஹர்ஸான்
