உள்நாடு

கம்மன்பில CID இற்கு

(UTV | கொழும்பு) –   நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை டீல் செய்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆவணங்கள் சிலவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனது சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிட்டுள்ளார்.

Related posts

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு குறித்த மெட்டா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு

editor

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்