உள்நாடு

கம்பஹா தேவா கட்டுநாயக்கவில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் கம்பஹா தேவா எனப்படும் திசாநாயக்க தேவன்மினி திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (03) காலை 8.10 மணியளவில் தாய்லாந்துக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என்றும், அந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிருத்தம்

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பதவியேற்பு