அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய நிருத் தோற்சவம் ஆடல் வேள்வி 2025 வெள்ளவத்தை உள்ள இராமக்கிருஷ்ணன் மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 5, 6,7ஆம் திகதிகளில் கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
சனிக்கிழமை கம்பனில் அறம், வெள்ளிக்கிழமை தமிழ் தந்த கம்பன் ரவிவர்மா ஓவியங்கள், ரசமஞ்சரி, கம்பனின் காவிய நாயகன், காதம்பரி, போன்ற தலைப்புகளில் ஆடல் வேள்வி நிகழ்வுகள் காலை ,மாலை நேர அரங்காக பரத நாட்டியம், நாட்டியம் போன்ற துறையில் உள்ள நாட்டியக் கலைஞர்கள் ஆசிரியர்களின் பரத நாட்டி நிகழ்வே இம்முறை மூன்று நாட்கள் நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கம்பனின் காவிய நாயகன் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் புரவலர் அறக்கட்டளை ஸ்தாபக தலைவர், இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர் திருமதி ஹாசீம் உமர் ஆகியோர்கள் பிரதம விருந்தினர் களுள் ஒருவர் கலந்து கொண்டு நிகழ்வுக்கு மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர் அத்துடன் கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதன் அவர்கள் அதிதிகளுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
அத்துடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு யதுகுலசிங்க அநிருந்தனன் தலைமை உரையை நிகழ்த்தினார்.
அத்துடன் கம்பவாரதி ஜயா அவர்களும் மண்டபம் நிறைத்திருந்து பொதுமக்கள் பல்வேறு தலைப்புகளில் கம்பராமாயணம் கம்பன் பற்றிய நாட்டிய காலைமணி, ஸ்ரீமதி பவானி குப்பிரியா, கலைச்சுடர், ஸ்ரீதேவி கண்ணதாசன். கலைமாணி, ஸ்ரீமதி சீவானந்தி ஹரிதர்சன், கலாசூரி, அபிராமி பற்குணம் ஆச்சர்ய கலா சாகர ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன், நா்த்தன கலைமணி ஸ்ரீமதி லக்ஷ்மி ஸ்ரீஹரன் போன்ற ஆறு நாட்டிய ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பரதநாட்டிய நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டது இந் கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் இந்த நாட்டிய ஆடல் பாடல்களைக் பெருந்தொகையான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
-அஷ்ரப் ஏ சமத்
