உள்நாடு

கப்ராலிற்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்திருந்த அஜித் நிவாட் கப்ரால், அப்பதவியிலிருந்து விலகியதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனமானது, சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து, அதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor