உள்நாடு

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

(UTV | அம்பாறை) – “MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பனாமா நாட்டுக்கு சொந்தமான“MT NEW DIAMOND“ என்ற கப்பலில் 2 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் மற்றும் 1700 மெற்றிக் தொன் டீசல் ஆகிவற்றுடன் குவைட்டில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய் கப்பல், 38 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நேற்று தீ விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின

சஜித், அனுரவின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது – பிரசன்ன ரணதுங்க

editor

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்