வணிகம்

கனவு கார் திட்டத்தை கைவிட்ட டெஸ்லா

(UTV | கலிபோர்னியா) – பிரபல கார் நிறுவனமாக டெஸ்லா மின்சாரத்தில் இயங்கும் அதிவேக கார் தயாரிக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

கார் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் அதிவேக கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

சமீபத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பேட்டரியில் அதிக தொலைவு இயங்கும் எஸ் ப்ளெய்ட் ப்ளஸ் என்ற புதிய கார் மாடலை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 643 கி.மீ தூரம் வரை பயணிக்கும் அளவிற்கு அந்த கார் வடிவமைக்கப்பட இருந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக எஸ் ப்லெய்ட் உருவாக்கம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தயாரிப்பில் உள்ள மின்சார கார்களை மேம்படுத்த இருப்பதால் எஸ் ப்ளெய்ட் கார்கள் தயாரிக்கும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Related posts

கொழும்பு பங்குச் சந்தை நாளை திறப்பு குறித்த அறிவிப்பு

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது