உள்நாடுபிராந்தியம்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள திருகோணமலை, தம்பலகாமம்

தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

அங்கு கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

Related posts

கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல்: சாரதிக்கு தடை! கப்பலை பொறுபேற்ற இலங்கை அரசு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – 10 வயது சிறுமி பலி – மூவர் படுகாயம்

editor

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன