அரசியல்உள்நாடு

கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் – இலங்கை கண்டனம்

இலங்கை அரசாங்கம் ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (14) கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related posts

படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை!

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார்

editor

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!