உள்நாடுபிராந்தியம்

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (22) பத்து வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 113,708 கன அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது நிமிடத்துக்கு 2000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

-கந்தளாய் யூசுப்

Related posts

நாளை நாட்டின் பல மாவட்டங்களில் மழை

editor

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

வடகாசாவிலிருந்து வெளியேறவும் : 3மணி நேர காலக்கெடு கொடுத்த இஸ்ரேல்