உள்நாடு

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மதகுரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

விசேட ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

editor

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை