உள்நாடுவிசேட செய்திகள்

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு அச்சுறுத்தல் – அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிஸார்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

இது குறித்து கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியன அழைக்கப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் எவ்வித வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம்

editor

ஷானி’க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு