சூடான செய்திகள் 1

கண்டி – கொழும்பு வீதியின் போக்குவரத்து மட்டு…

(UTVNEWS | COLOMBO) – கஜமா விகாரையில் வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையில் எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வலியில் மாற்று பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியுமென அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து-(PHOTOS)

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

மிருக காட்சிசாலை ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்