அரசியல்உள்நாடு

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சுமார் 500 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

கண்டி மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். வேட்பு மனுவில் 15 உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையிலேயே சுமார் 500 பேர் எம்மிடம் விண்ணப்பித்துள்ளனர், என்றார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் கல்விமான்கள், வர்த்தகர்கள் மற்றும் இதற்கு முன்னர் ஏனைய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

அபேட்சகளை தெரிவு செய்யும் நியமனக் குழு இதுவரை 60 பேர் மீது கவனம் செலுத்தியுள்ளது.

இந்த 60 பேரில் இறுதியாக 15 பேரை தேரிவு செய்யப்படுவார்கள் என்றும் லால்காந்த தெரிவித்தார்.

-ரஷீத் எம். றியாழ்

Related posts

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor