உள்நாடு

கண்டியன் விவாக சட்டங்களை நீக்கவேண்டும் – அத்தரலியே தேரர்

(UTV|கொழும்பு) – கண்டியன் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை நீக்குவதற்கான பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் ஒன்றுகூட உள்ள நிலையில் இதன்போது குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரரினால் சமர்பிக்கப்பட உள்ளது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் விஷேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமான நீதிமன்ற முறையை நிராகரித்தது போன்று கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்க வேண்டும் என அத்தரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வார இறுதியில்..?

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

editor

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது