உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த தருணத்தில் லொறியில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவிஷ்க மல்லி என்பவரின் சித்தி மகன் மீதே இவ்வாறு இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது எந்த குற்றவியல் குற்றமும் இதுவரையில் பதிவாகவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 2 ஆவது நாளாகவும் தொடர்கிறது

editor

புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – கட்டுப்பணத்தை செலுத்தியது

editor

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்