வகைப்படுத்தப்படாத

கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை

(UTV|POLANNARUWA)-பொலநறுவை பகுதியில் கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் விசமருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கணித பாட பரீட்சைக்கு தோற்றிய மாணவர் தனக்கு உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் போனதாக நினைத்து இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என குறித்த மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தையின் முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த மாணவர் முச்சக்கரவண்டியை பிரிதொரு பகுதியில் நிறுத்தி விட்டு விசமருந்தியுள்ளார்.

மாணவரை பெற்றோர் தேடிய சந்தர்ப்பத்தில் அவர் நஞ்சருத்தியிருப்பதனை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

How to get UAE tourist visa fee waiver for kids

ලෝක කුසලාන පළමු අවසන් පුර්ව තරඟයට ඉන්දියාව සහ නවසීලන්තය සුදානම්

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி – காரணம் இதுதானா?