வகைப்படுத்தப்படாத

கணனி தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன

(UDHAYAM, COLOMBO) – புத்தளம் முள்ளிபுரம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலய நிர்வாக, காரியாலய மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக கணனி தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் எச்.ஏ. ஜப்பார் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம். முஹுசியிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இந்த கணனி தொகுதிகள் வழக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை (25) காலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த கணனி தொகுதிகளை பாடசாலை அதிபர் எச்.ஏ. ஜப்பார் மற்றும் பிரதி அதிபர் எம். மொஹிதீன் ஆகியோரிடம் எஸ்.ஆர்.எம். முஹுசி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் முள்ளிபுரம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தை எச்.ஏ. ஜப்பார் அதிபராக கடமையேற்ற பின்பு பல்வேறு அபிவிருத்திகளின் பால் இட்டுச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Showers expected in several places today

ஹொங்காங் போராட்டத்தை தலைமை தாங்கியவர் கைது

எதிர்வரும் 11 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர், இந்தியா விஜயம்