உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த லொரி!

பொருட்கள் ஏற்றி வந்த லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (31) காலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல பிராதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – கொழும்பு வீதியூடாக பயணித்த பொருட்களை ஏற்றிச் சென்ற லொரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், லொரியை செலுத்திச் சென்ற சாரதிக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது