உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா) தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு பெட்ரோல் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்