உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனை

(UTV|கொழும்பு)- வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே PCR பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை, இதுவரை 21 நாடுகளில் இருந்து 10 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் 18 ஆயிரம் வரையிலான இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

editor

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

editor