உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!

(UTV | கொழும்பு) –

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்தி செல்லப்பட்ட நபரை பொலிஸாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த வர்த்தகரிடம் இருந்து தங்கம் அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக எடுத்துச் சென்ற 2 பொலிஸ் சார்ஜன்ட்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெளிப்படுத்திய தகவலுக்கமைய, தங்கத் தூள் கலந்த இரண்டு ஜெல் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொஸ்வத்த கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகத்தின் பேரில் இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு