உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 24ஆம் திகதி இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நபருக்கு எதிராக இரண்டு வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொது அமைதியை பேண ஆயுதப் படைகளை வரவழைக்கும் வர்த்தமானி அறிவிப்பு

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்