உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க வந்த 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று (19) காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL- 881 விமானம் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

அத்துடன் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் தரையிறங்குவதற்கு பாதிப்பாக இருந்த பனிமூட்டமான நிலைமை நீங்கி தற்போது சீரான வானிலை தென்படுவதாக கூறப்படுகின்றது.

Related posts

எளிமையான முறையில் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சாகித்திய விழா!

editor

இன்று முதல் உணவுப் பொதிகளின் விலை, பாண் விலை அதிகரிப்பு

தவறான விளம்பரம் குறித்து அவசர அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட தலதா மாளிகை

editor