வகைப்படுத்தப்படாத

கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் என்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

கட்டார் அரசாங்கம் முஸ்லிம் கடும்போக்கு வாதத்துக்கு நிதியுதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்துகின்ற ஆறு நாடுகள், அந்த நாட்டுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டன.

இது தொடர்பில் கட்டார் கண்டனம் தெரிவித்து வருகிறது.

மேலும் தாங்கள் முஸ்லிம் கடும்போக்காளர்களை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கட்டார் அறிவித்துள்ளது.

எனினும் தமது அண்மை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை அடுத்தே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தீவிரவாதம் முடிவு காண்பதற்கான ஆரம்பமாகும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளம் கட்டாரில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

England beat India for crucial win

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

මාතලේටත් නව මහාධිකරණයක්