வகைப்படுத்தப்படாத

கட்டாரில் வெப்பநிலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கட்டாரில் வெப்பம் 47 – 50 டிகிரியாக அதிகரித்துள்ளதால் கட்டார் அரசு பின்வரும் பொது அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

அதில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிறப்ப வேண்டாம் என்றும், வாகனங்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்க வேண்டாம்.

நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறும், வெளியில் பறவைகள், விலங்குகள் அருந்துவதற்காக நீர் குவளைகளை வைக்குமாறும், மின்சாரத்தை அவதானமாக பாவிக்குமாறும், நீர் சூடாக்கும் கருவிகளை உபயோகிப்பதை தவிர்க்குமாறும் , வாகனங்களின் கண்ணாடிகளை மிகச்சிறிய அளவில் திறந்துவைக்கவும்.

மாலை நேரங்களில் எரிபொருளை வாகங்களுக்கு நிரப்பிக்கொள்ளுமாறும் கூறப்பட்டிருப்பதோடு, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரியன் அதிகம் உச்சம் கொடுக்கும் எனவும் கட்டார் அரசு அறிவித்தல் விடுத்துள்ளது.

Related posts

பஸ் நடத்துனரால் கொலை செய்யப்பட்ட, பஸ் சாரதி

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எம்மர்சன் நங்கக்வா வெற்றி…

Nuwara Eliya Golf Club launches membership drive