உள்நாடு

கட்சி செயலாளர்களுக்கு தீர்த்தல் ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி காலை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தேர்தல்கள் திருத்தம் தொடர்பான தெரிவுக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆதரவை கோரவுள்ளன.

அத்தோடு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு – மீண்டும் விசாரணை ஆரம்பம்

editor

சந்திப்பு, நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்