உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சித் தலைமை குறித்து சஜித் கருத்து [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கட்சித் தலைமை என்பது பதவி ஒன்று மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமை பதவி வழங்காவிடின் தனிக் கட்சியொன்றை ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறதா என்று இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ, வழங்காவிட்டால் என்ற பதத்தை தவிர்க்க விரும்புவதாகவும், அனைத்தும் ஜனநாயக ரீதியாக தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Related posts

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

அட்டாளைச்சேனை சாதனை மாணவனின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹீர் MP!

editor

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது