சூடான செய்திகள் 1

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்