உள்நாடு

கடுவலை பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (26) உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேக நபருக்கு 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியாக இருந்த பாதிக்கப்பட்டவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்கம பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், பாடசாலை முடிந்ததும் வேலை தேடி புறக்கோட்டைக்குச் சென்ற போது, சந்தேக நபர் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கடுவலை வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு