உள்நாடு

கடும் மழை காரணமாக வட மத்திய மாகாண வீதிகள் நீரில் மூழ்கின – போக்குவரத்துக் கட்டுப்பாடு

நிலவும் கடும் மழை காரணமாக வட மத்திய மாகாணத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, நீரில் மூழ்கியுள்ள பின்வரும் வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்வரும் வீதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் மேலும் தெரிவித்தார்:

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி: மன்னம்பிட்டி பகுதியில்

பொலன்னறுவை – சோமாவதி வீதி: சுங்காவில பகுதியில்

ஓயாமடுவ – செட்டிக்குளம் வீதி: முழுமையாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – வாரியபொல வீதி: தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கு – சாட்சியாக பெயரிடப்பட்ட ஷானி அபேசேகர

editor

ஒரே பாலின திருமணத்திற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பு

editor