வகைப்படுத்தப்படாத

கடும் பனிப்பொழிவு – 2-வது நாளாக விமானங்கள் இரத்து

(UTV|INDIA) காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய 27 விமானங்களில் 15 விமானங்கள் தற்போதைக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலமை சீராகும் பட்சத்தில் பிற விமானங்கள் சேவை தொடங்கும் எனக்கூறப்படுகிறது. எனினும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Austria orders arrest of Russian in colonel spying case

சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

පළාත් කිහිපයකට වැසි සහ සුළගේ වැඩිවීමක්