அரசியல்உள்நாடு

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக தொகையை செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அவர்கள் தங்கள் பதவிகளை இழக்கநேரிடலாம் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களிற்குள் அவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் செலவீனஙகள் குறித்து வேட்பாளர்கள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இந்த அறிக்கைகளை செய்தித்தாள்கள் இணையங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வழங்கிய தகவல்களில் தவறு காணப்பட்டால் பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கலாம் உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை இன்றும்

கசிப்புடன் 24 வயதுடைய இளைஞர் கைது!

editor

இன்னும் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி குற்றச்சாட்டு

editor