உள்நாடுபிராந்தியம்

கடுமையான காற்று – இருளில் மூழ்கிய மலையகம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் செனன் தோட்டம் பகுதியில் இன்று (27) அதிகாலை மரங்கள் பல வீழ்ந்ததால், அந்த வீதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து பிரதான வீதியில் வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றிய பின்னர், அந்த வீதியில் போக்குவரத்து ஒரு வீதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா பகுதியில் பாரிய மரங்கள் வீழ்ந்ததால், வீதியை ஒட்டிய மின்சார மற்றும் தொலைபேசி கம்பங்கள் சில உடைந்து விழுந்துள்ளன.

ஹட்டன் வனராஜா தோட்டத்தில் உள்ள குடியிருப்பு தொடர் ஒன்றில் மாமரம் ஒன்று வீழ்ந்ததால், மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறைச் சுவர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நிலவும் கடுமையான காற்று நிலைமைகள் காரணமாக, உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் மீது மரங்கள் மற்றும் மரக் கிளைகள் விழுந்ததால், ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, மற்றும் நோர்டன் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

தடைபட்ட பகுதிகளுக்கு விரைவில் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள்

editor