உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு – நால்வர் வைத்தியசாலையில்!

கண்டி, கீழ் கடுகண்ணாவ பகுதியில் கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இன்று (22) காலை மண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக, பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது கடைக்குள் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மாவனல்லை ஆதார வைத்தியசாலையில. அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கடை சிற்றுண்டி மற்றும் தேநீருக்குப் பிரபலமான கடை என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – சாணக்கியன் எம்.பி

editor

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை