உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

பஹல கடுகண்ணாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது.

Related posts

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

editor

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது