உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – தொடரும் சோகம்

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிய வருகிறது.

Related posts

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா கவனம்

editor

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்த முற்பட்டவர் கைது

editor

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!