உள்நாடுபிராந்தியம்

கடவத்தை பகுதியில் 12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கடவத்தை, பியன்வில பகுதியில் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ஐஸ், 1 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 9 கிலோகிராம் ஹெரோயின் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் தற்போது கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதான பெண் 32 வயதுடையவர் என்றும், ஆணுக்கு 26 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (09) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

CIDயில் இருந்து வெளியேறினார் சாமர சம்பத் எம்.பி

editor

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor

நான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்

editor