வகைப்படுத்தப்படாத

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்.

(UTV|COLOMBO)-காங்கேசன் துறையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 50 முதல் 55 வரை அதிகரிக்ககூடும்.

நாட்டின் ஊடாக தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை  படிப்படியாக நிலைபெறக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விசேடமாக பிற்பகல் 2 மணிக்கு  பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஊடாக அடிக்கடி 50 கிலோமீற்றர் வேகத்துடனான காற்றை எதிர்பார்க்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு சபிரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலையில் பனிமூட்டத்துடனான காலநிலையை எதிர்பார்க்கமுடியும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக இந்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும்.
இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்.
திருகோணமலையில் இருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடல்; பிரதேசத்தில் மழைபெய்யக்கூடும்.
நாட்டின் தென்மேற்கு திசையிலான கடல் பிரதேசத்தில் விசேடமாக பிற்பகல் 2 மணிக்கு பின்னர மழை அல்லது இடியுடன் கூடிய மழையை எதிரபார்க்கலாம்.
தென்மேற்கு திசையில் காற்று 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். காங்கேசன் துறையில் இருந்து புத்தளம் வரையிலான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகம் வரையில் அதிகரிக்ககூடும்.
காங்கேசன் துறையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 50 முதல் 55 வரை அதிகரிக்ககூடும்.
கடலும்; அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது இந்த கடல் பகுதியில் தற்காலிகமாக ஓரளவுக்கு கடும் காற்று வீசக்கூடும்.
கடலும் கொந்தளிப்புடன் காணப்படும். கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுப்படுவோர் அவதானத்துடன் செயல்படவேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Unemployed graduates tear-gassed

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

“Sri Lanka keen to expand defence cooperation with Japan” – President