உள்நாடுபிராந்தியம்

கடல் அலையில் அள்ளுண்டு சென்ற 3 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்பு

கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (17) இடம்பெற்றதாகவும், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடல் நீரோட்டத்தில் சிக்கிய இளைஞர்களை பாதுகாப்பாக மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும், 16 வயதுடையவர்கள் எனவும், வெல்லம்பிட்டிய, கட்டுக்குருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த கடல் அலைகள் காணப்படும் போது பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

editor

முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டது

editor

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – விஜயதாச