உள்நாடுபிராந்தியம்

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேர் – பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்பு

எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத, பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது [UPDATE]

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்.

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டம் இன்று