உள்நாடு

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

(UTV|கொழும்பு)- கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, பேருவளை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

பலமான மாற்றுத்தெரிவு சங்குச் சின்னமே – சிவசக்தி ஆனந்தன்

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் – சரத் பொன்சேகா

editor