உள்நாடு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றிருந்து பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 755 பேர் கைது

இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்