உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் 679 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 679 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை 1880 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

100 க்கும் அதிகமான யானைகள் வருகை – பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

editor

நாட்டில் கடும் வெப்பம் – சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

editor