வணிகம்

கடந்த 3 மாத சோதனை நடவடிக்கையில்-24 மில்லியன் ரூபா வருமானம்

(UTV|COLOMBO)  கடந்த 3 மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 124 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தங்கம், சிகரட், போதைப்பொருள், வௌிநாட்டு நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டன.

குறித்த காலப்பகுதியில் 41 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, அரசுடமையாகப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 124 மில்லியன் ரூபாவாகும் என சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மட்டு ‘2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்’ இன்று

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபா விலையின் கீழ் கொள்வனவு…