உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 878 பேருக்கு தொற்று : இருவர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 878 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாள் ஒன்றில் 866 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொவிட-19 நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை இரட்டை கொத்தணிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் இலங்கையில் இதுவரையில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 6,982 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர் கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 30 ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுறுதி காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொழும்பு 13ஐ சேர்ந்த ஆண் ஒருவரும் கொவிட் 19 நோயால் மரணித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி தமது வீட்டில் வைத்து உயிரிழந்த நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை அதிகரித்து இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நுவரெலியாவில் கோர விபத்து – 21 வயதுடைய இளைஞன் பலி

editor

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவர வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க CID யில் ஆஜராகியுள்ளனர்.

editor