உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் 1,684 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

இதன்போது அனுமதியின்றி பயணித்த 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு 37 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

Related posts

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

காசாவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து பிரதமர் ஹரிணி கவலை

editor